டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!

மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 287 ஆசிரியர்கள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் அமைப்பினர் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டிட்டோஜாக் அமைப்பினர் கடந்த 18 ஆம் நாள் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான புதிய பென்சன் திட்டம் ரத்து, இடைநிலை ஆசியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றிடல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி   மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுக்கு விமர்சித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டதாக கூறி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்க மாவட்ட தலைவர் பீட்டர் ஆரோக்கியராஜ். மாவட்ட செயலாளர்கள் மகாலிங்கம், கணேசன், பாரதிசிங்கம், சீனிவாசன் உள்ளிட்ட் நிர்வாகிகள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளன

மேலும் போராட்டத்தில் பங்கேற்ற 118 ஆசிரியர்கள், 152 ஆசிரியைகள் என 270 ஆசிரியர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.