முக்கியச் செய்திகள் செய்திகள்

விசாரணை வளையத்தில் சகோதரர்கள்: சஜீவனுக்கு செக்?

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக சஜீவனின் சகோதரரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3 நாட்களில் 27 மணி நேரம் விசாரணை நடத்திய போலீஸார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், கொடநாடு கொலை வழக்கில் ஆறாவது குற்றவாளியான பிஜின்குட்டியின் சகோதரர் மோசஸ் வியாழக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். ஏற்கனவே அதிமுக பிரமுகர் சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியிருந்தனர். சிபியிடம் தனிப்படை மேற்கொண்ட விசாரணையில் அவரும், மோசஸூம் ஏற்கனவே நண்பர்கள் என்பது தெரியவந்தது. மேலும், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று இரவு மோசஸிடம் குற்றவாளிகள் செல்போனில் பேசி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் மோசஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.

காலை 10.30 மணிக்கு ஆட்டோவில் மோசஸ் உட்பட 3 பேர் வந்தனர். 3 பேரும் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை நடைபெறும் மையத்திற்கு சென்றனர். சிறிது நேரத்தில் அவர்களில் ஒருவர் மட்டும் வெளியேறிவிட மோசஸ் உட்பட இருவரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மாலை 6 மணி வரை சுமார் 7.30 மணி நேரம் நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் மோசஸ் உட்பட இருவரும் மாலை 6 மணி அளவில் வெளியேறினர். மோசஸுடன் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட நபர் குறித்த விபரங்களை தனிப்படை போலீஸார் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை விசாரிக்கப்படாத நபர்கள் ஒவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கும் நிலையில், இந்த வழக்கில் புதிய நபர்களும் தனிப்படை போலீஸாரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல் துறையினருக்கு புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். புதிய கோணத்தில் புதிய நபர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் புதியதாக மேலும் சிலர் கைதாகக் கூடும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில், அதிமுக பிரமுகரும், மர வியாபாரியுமான சஜீவனின் சகோதரர் சுனிலிடம் போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடநாடு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு குற்றவாளிகள் தப்பிச் செல்லும்போது கூடலூர் காவல் சோதனைச் சாவடி அருகே காவல் துறையினர் அவர்களைப் பிடித்தனர். அப்போது, போலீஸாரிடம் சுனில் போனில் பேசி குற்றவாளிகளை விடுவித்தார். வழக்கில் சுனில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையே அவருடைய மற்றொரு சகோதரரான சிபியிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சிபியும், இவ்வழக்கில் 6வது குற்றவாளியாக உள்ள பிஜின்குட்டியும் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதும், கொடநாடு சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சஜீவனிடம் போலீஸார் 2 நாள்கள்  விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபியிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து, சுனிலிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே குற்றவாளியுடன் தொடர்பில் இருந்ததால் அவர்களுடன் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி, இந்த சம்பவத்தில் இவர்களுடைய தொடர்பு என்ன, இதில் சஜீவனின் பங்கு என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்; அமைச்சர் ரகுபதி

Saravana Kumar

கொரோனா; களையிழந்த தைப்பூச விழா

Saravana Kumar

அன்புமணிக்கு தலைவர் பதவி ; ஜிகே மணிக்கு..?

Halley Karthik