முக்கியச் செய்திகள் Health

மனநோய் குறித்த புரிதல்களை உடைக்கும் மருத்துவர் சிவபாலன்

“மனநோய் என்றாலே அது ஒன்றுதான் அதை குணப்படுத்த முடியாது, அதற்கு சிகிச்சை பலனளிக்காது” என தட்டையாக புரிந்து கொண்டிருக்கிறோம் என மனநல மருத்துவர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

மனநலத்தின் மீதான புரிதல் குறித்து மனநல மருத்துவர் சிவபாலன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒன்றின் மீதான களங்கத்தை, நாம் அதை பற்றி தொடர்ந்து பேசுவதன் வழியாகவே போக்க முடியும். “Power of Taboo” என சல்மான் ருஷ்டி குறிப்பிடுவது அதையேதான். நாம் பேசத்தயங்குகிற ஒன்றின் மீதான ஆற்றல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. அதை பற்றியான சகஜமான உரையாடலே அதன் மீதான வெளிப்படைத்தன்மையை உருவாக்குகிறது. ஒரு விஷயத்தின் மீது வெளிப்படைத்தன்மை வந்துவிட்டால் அதன் மீதான களங்கம் போய்விடும் என தெரிவித்துள்ள அவர், மனநலம் என்றால் என்ன? அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் என்றால் என்ன? மனஆரோக்கியமின்மை என்றால் என்ன? மனநோய்கள் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை உணராததின் விளைவே மனநலத்தின் மீதான நமது அரைகுறை புரிதல்களுக்கு காரணம் என அவர் குறிப்பிடுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், மனநல ஆரோக்கியமின்மைகள் மற்றும் தற்காலிக பிரச்சினைகள் போன்றவற்றை நாம் மனநோய்களுடன் குழப்பிக்கொள்கிறோம் அதனால் தான் அனைத்திற்கும் ஒரே வகையான தீர்வை எதிர்பார்க்கிறோம். முதலில் Counselling என்பது ஆலோசனை. ஆலோசனையில் குணப்படுத்துவது நோக்கமல்ல, ஏனென்றால் ஆலோசனை தேவைப்படுபவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டவர்களோ அல்லது மன நோயாளிகளோ அல்ல.

அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகளில் சிக்கித்தவிக்கும் ஒருவருக்கு அந்த சூழலின் இயல்பினால் உண்டாகும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்து அதில் இருந்து வெளியேறும் வழியை கண்டறிய முடியாததால் இன்னொரு மூன்றாம் நபரின் வழியாக அதை அடைவது தான் ஆலோசனையின் நோக்கம். அதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வைப்பதும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை கண்டடைய வைப்பதுதான் ஆலோசனை.

ஆலோசனையை யார் வேண்டுமானால் கொடுக்கலாம், எந்த theoretical background-ம் தேவையில்லை. Non judgemental ஆகவும், எந்த புற சாய்வின்றியும், ஓரளவிற்கு வாழ்க்கை மீதான பரந்துபட்ட பார்வையும் இருந்தால் போதும் யார் வேண்டுமானால் யாருக்கு வேண்டுமானால் ஆலோசனை கொடுக்கலாம்.

Therapy என்பது சிகிச்சை. மனரீதியாக பாதிப்புள்ளானவர்களை அந்த பாதிப்பில் இருந்து சில established schools of psychology இன் முறைப்படி மீட்பதே சிகிச்சை. சிகிச்சையை முறையாக பயின்ற மருத்துவ உளவியல் நிபுணர்களோ (Clinical Psychologist) அல்லது மனநல மருத்துவர்களோதான் கொடுக்க முடியும்.

யாருக்கு சிகிச்சை தேவைப்படும்? மனநல பிரச்சினைகள் மற்றும் மன நோய்களை பொறுத்தவரை இரண்டு காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. 1. Biological, அதாவது உயிரியல் காரணங்களால் வரக்கூடிய மனநோய்கள். 2. Psychological, உளவியல் காரணங்களால் வரக்கூடிய மனநோய்கள்.

Biological பிரச்சினைகளுக்கு biological சிகிச்சை மற்றும் Psychological பிரச்சினைகளுக்கு psychological சிகிச்சை. Biological பிரச்சினைகளுக்கு psychological சிகிச்சை கொடுத்தாலோ அல்லது psychological பிரச்சினைகளுக்கு biological சிகிச்சை கொடுத்தாலோ அதனால் பயன் ஒன்றும் இல்லை. சில நேரங்களில் இரண்டு விதமான சிகிச்சை முறைகளும் கூட ஒருவருக்கு தேவைப்படலாம். அது அவருக்கு இருக்கும் மனநல பிரச்சினையை பொறுத்தது.

மனநோய்களை பொறுத்த வரை மிக சாதாரணமாக குணமாகக்கூடிய பிரச்சினைகளில் இருந்து வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும் நோய்கள் வரை ஏராளமான நோய்கள் இருக்கின்றன. ஆனால் நாம் “மனநோய் என்றாலே அது ஒன்றுதான் அதை குணப்படுத்த முடியாது, அதற்கு சிகிச்சை பலனளிக்காது” என தட்டையாக புரிந்து கொண்டிருக்கிறோம்.

தீவிர மன நோய்கள் என்று அடையாள பட்டுவிடுவோம் என்ற பயத்தினால் நாம் எளிய மனநல பிரச்சினைகளை வெளியே சொல்லாமல் மறைத்துக்கொள்கிறோம். இப்படி உள்ளுக்குள் நாம் மறைத்துக்கொள்ளும் எளிய மனநல பிரச்சினைகளே பின்னாளில் தீவிரமடைகின்றன. இன்று உலகத்தை அச்சுறுத்துவது schizophrenia வோ அல்லது Bipolar disorder அல்ல. மிக சாதாரண மனச்சோர்வும், மனப்பதட்டமும் தான் மிக அதிகமான சுமையை கொடுக்கின்றன, இவற்றை மிக எளிமையாக சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.

அண்மைச் செய்தி: ‘ஷவர்மா, பிரியாணி ஆபத்தான உணவுப் பொருளா? – விளக்கும் அரசு மருத்துவர் ஃபரூக் அப்துல்லா’ 

உலகத்திலேயே இளம் வயதினரும் தற்கொலைகள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் முன்னே இருக்கிறது. மிக சுலபமாக குணப்படுத்தக்கூடிய மனரீதியான பிரச்சினைகளே அதற்கு காரணமாக இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். மனநல சேவைகளை விரிவுபடுத்தும் போதும் அதன் மீதான களங்கப்பார்வை போக்குவதும் தான் இதை குறைப்பதற்கான ஒரே வழியாக இருக்கிறது.

அதனால் மனரீதியாக சோர்வடையும் போது ஒருவரின் உதவியை நாடுவது பலவீனமானது அல்ல. அதற்காக நாம் வருத்தப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. யாராவது நம் மீது அக்கறை கொண்டவரிடம் அதை பகிர்வதில் எந்த இழுக்கும் இல்லை. அப்படி யாராவது நம்மிடம் பகிர்ந்தால் “எல்லாம் உன் மனசுல தான் இருக்கு, இதற்கெல்லாம் கவலைப்படலாமா?, நீயே தைரியமா சமாளிக்கணும், தெரபியால் எந்த பயனும் இல்லை” என்று ஜல்லியடிக்காமல் அவர் சொல்வதை கேளுங்கள். சரியாக கேட்பதே நிறைய பிரச்சினைகளை தீர்த்துவிடுகிறது என்பதை எனது அனுபவத்தில் கண்டறிந்திருக்கிறேன்.

ஒருவேளை உங்களால் அவருக்கு உதவ முடியவில்லையா உடனடியாக அவரை உரிய நிபுணரிடம் அழைத்து சென்று காட்டுங்கள். உண்மையில் அவருக்கு ஒன்றும் இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் ஏதாவது இருந்து அதை அலட்சியப்படுத்தி அதனால் இழப்பு உண்டானால் அதற்கு நீங்களே முழு முதல் பொறுப்பு. பொறுப்புகளை உணருங்கள். கொஞ்சம் பொறுப்பாய் நடந்து கொள்ளுங்கள்’ என அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மார்ச் -8 பெண்கள் வாங்கும் மொபைல்களுக்கு 10 % தள்ளுபடி: ஜெகன்மோகன் ரெட்டி

Jeba Arul Robinson

குடற்புழு நீக்கத்துக்கு மாத்திரை வழங்கும் திட்டம் 100% செயல்படுத்தப்படும்: மா.சுப்பிரமணியன்

Ezhilarasan

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பாஜக செயல்படவில்லை: மாநில தலைவர் அண்ணாமலை

Arivazhagan CM