குற்றச் செயல்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் காவல்துறை

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் ‘ட்ரோன்’ மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும்…

தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை விரைவாக கண்டறிய வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில் ‘ட்ரோன்’ மூலம் காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் காவல்துறையின் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணார்பேட்டை எம்.சி.ரோடு பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் புத்தாடைகள் வாங்குவதற்கு குவிந்து வருகின்றனர்.

இதனால், அங்கு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரோந்து காவலர்கள், ரோந்து வாகனங்கள், கண்காணிப்பு கோபுரங்கள், பைனாகுலர் கண்காணிப்பு என கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்காலிக கட்டுப்பாட்டறை அமைத்தும், காவல் குழுவினர் ஒலி பெருக்கிகள் மூலம் அறிவுரைகள் வழங்கியும் வருகின்றனர்.

ராயபுரம் காவல் ஆய்வாளர் பூபாலன் தலைமையில், ‘ட்ரோன்’ கேமரா அமைக்கப்பட்டு அதன்மூலம் எம்.சி.ரோடு பகுதியில் கூட்டத்தினரை தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, கொரோனா தொற்று பரவாமலும், பொதுமக்களின் உடைமைகள் திருடு போகாமலும் இருக்க காவல்துறை சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.