வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி கொண்டாடிய எஸ்பி!

தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக…

தென்காசியில் வடமாநில தொழிலாளர்களுடன் இணைந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அங்கு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர், காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் உட்பட காவல் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
— வேந்தன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.