நீட் வினாத்தாள் விற்க முயன்ற மூவர் போலீசாரால் கைது!

2025 நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்க முயன்ற மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று(மே.04) நடைபெற்றது. நாடு முழுவதுதிலும் இருந்து சுமார் 22 லட்சம் மாணவ, மாணவியர் இத்தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கான வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.  ராஜஸ்தானில் ரூ. 40 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் விற்க முயன்ற 3 பேரை அம்மாநில காவல் துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழுவினர் கைது செய்தனர்.

தேர்வு எழுதவிருந்த மாணவரின் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு நீட் வினாத்தாள் இருப்பதாக ஆசைவார்த்தை கூறி பணத்தை பறிக்க முயன்றபோது, காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பல்வான் (வயது 27), முகேஷ் மீனா (வயது 40), ஹர்தாஸ் (வயது 38) என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.