முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 6பேரை பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் இளைஞர்கள் 

காட்டாற்று வெள்ளத்தில் பொலிரோ காருடன் சிக்கிய 6 பேரை  உயிரைப் பணயம் வைத்து வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேரை பத்திரமாக மீட்ட காவல் துறை ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் இளைஞர் வினோத்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா வள்ளிபட்டி கிராமத்தில் வேடசந்தூரிலிருந்து கரூர் செல்லும் சாலையில் மாலை 5 மணியிலிருந்து அதிகளவு மழை பெய்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் பயங்கரமான காட்டாற்று வெள்ளம் சென்றதால் அந்த சாலையில் டிஎஸ்பி துர்கா தேவி உத்தரவின் பேரில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறை சார்பாக சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சிறப்புச் சார்பு ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளோடு பகுதிக்கு திண்டுக்கல்லை நோக்கி  53 சண்முகம்  என்பவர் பொலிரோ காரை ஓட்டி வந்த உள்ளார். இவரோடு பாலசுப்ரமணி  56, பாலகிருஷ்ணன் 34, பாண்டியன்  42, செல்வராஜ் 50, மணிக்குமார்  35, ஆகிய ஆறு பேரும் காரில் திண்டுக்கல் நோக்கி வந்துள்ளனர்.  அப்போது
காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பொலிரோ காரை  சண்முகம் தரைப் பாலத்தினுள் இறக்க முற்பட்ட போது சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் தடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் பேச்சைக் கேட்காமல் காட்டாற்று வெள்ளத்துக்குள் இறக்கி பொலிரோ காரை சண்முகம் ஓட்டி சென்றுள்ளார்.
இதில் தரைப் பாலத்தில் அதிக காட்டாற்று வெள்ளம் சென்று கொண்டிருந்ததால் சாலையைக் கடக்க முடியாத பொலிரோ காரை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில் காரில் இருந்த ஆறு பேரும் காரோடு வெள்ளத்தில் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து சிறப்புச் சார்பு ஆய்வாளர் சந்திரசேகர் அப்பகுதி கிராம இளைஞரான வினோத்குமார், மற்றும் இளைஞர்களோடு இணைந்து பொலிரோ வாகனத்தில் இருந்த ஆறு பேரையும்  இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப்  போராடி தங்களது உயிரைப் பணையம் வைத்து ஆறு பேரையும் மீட்டனர்.
இந்நிலையில்  சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்ற டிஎஸ்பி துர்கா தேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு உயிர்ச்சேதம் ஏதுவுமின்றி வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேரையும் உயிருடன் மீட்ட  காவல்துறை ஆய்வாளர்  சந்திரசேகரனையும் இளைஞர் வினோத்குமாரையும் அனைவரும் பாராட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

”ஏழை, எளிய மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரே அரசு அதிமுக அரசுதான்”- முதல்வர் பழனிசாமி!

Jayapriya

நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Arivazhagan Chinnasamy

ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து சென்று 20 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்து

Dinesh A