அனைவரும் ஆவலாக காத்திருந்த “வெந்து தணிந்தது காடு” படத்தின் டிரெய்லர் அப்டேட்!

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி…

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. சித்தி இடனானி,ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து, இப்படத்திலும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானே இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான இரு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்படத்தின் டீசர் திரை ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப் 2) சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மிகப் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. இந்த விழாவில் படத்தின் ஆடியோ டிரெய்லரை படக்குழு வெளியிடவுள்ளது. சுமார் 2 நிமிடம் 15 நொடிகள் ஓடக்கூடிய டிரெய்லரில் யார் யார் இடம் பெறுவார்கள் கதைக்களம் பற்றிய விவரம் அடங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.