திருவண்ணாமலையில் வீட்டில் 3,000-க்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு!

திருவண்ணாமலையில் வீட்டில் 3000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். திருவண்ணாமலை ஓம் சக்தி நகரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிள்ளையர் சிலைகள் வைத்து…

திருவண்ணாமலையில் வீட்டில் 3000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

திருவண்ணாமலை ஓம் சக்தி நகரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் 3 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட பிள்ளையர் சிலைகள் வைத்து வழிபாடு ஏறாளமானேர் ஆச்சரியத்துடன்
பார்த்து செல்கின்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த 65 வயது உடைய முதியவர் அரவிந்தன் என்பவர் தனது வீட்டில் மாடியில் குடில் அமைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து கொலு வைத்துள்ளார்.

இதனை அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வியப்பாக பார்த்து செல்கின்றனர்.

மேலும் அரவிந்தன் வெளிநாடு மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது அங்கு
உள்ள வித்தியாசமான பிள்ளையார் சிலைகள் வாங்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதில் ஐம்பொன், நவதானியம், தங்கம், வெள்ளி மற்றும் மரத்தால் ஆன பல்வேறு வித
விநாயகர் சிலைகள் இக்கொலுவில் இடம்பெற்றுள்ளன.


மேலும் விநாயகர் மாட்டு வண்டி ஓட்டிச் செல்வது போன்றும் அந்தக் கால டெலிபோனில் பேசுவது போன்றும் செல்போனில் பேசுவது போன்றும் சீட்டு விளையாடுவது போன்றும் இசைக் கருவிகள் வாசிப்பது போன்றும் நடனம் ஆடுவது போன்றும் பல்வேறு வேடங்களில் 3 .ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்தக் கொலுவில் இடம் பெற்றுள்ளன.

இது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. மேலும் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது தன்னுடைய லட்சியம் எனவும் 25 வருடமாக இதில் ஈடுபட்டு வருவதாகவும் அரவிந்தன் தெரிவித்தார்.

மேலும், இந்த கொலு வைப்பதற்காக ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அரவிந்தன் கூறினார்.

திருவண்ணாமலையில் இது ஒரு புதிய முயற்சியாக உள்ளது. இதில்
பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காண வேண்டும் என்று அரவிந்தனின் நண்பர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.