போலந்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் இப்தார் விருந்து கொண்டாட்டம்!

போலந்து நாட்டின் தலைநகர் வாட்சாவில் போலந்து நாட்டு தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ரம்ஜான் இப்தார் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டப்பட்டது. போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில்,  தமிழ்ச்சங்கம் சார்பாக இப்தார் விருந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வில்…

போலந்து நாட்டின் தலைநகர் வாட்சாவில் போலந்து நாட்டு தமிழ்ச் சங்கத்தின் சார்பாக ரம்ஜான் இப்தார் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டப்பட்டது.

போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில்,  தமிழ்ச்சங்கம் சார்பாக இப்தார் விருந்து நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் போலந்து வாழ் தமிழ் மக்களோடு இணைந்து மலேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்களும்  கலந்து கொண்டனர். இவ்விழாவில் நோன்பு கஞ்சியும், சிறப்பு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், போலந்து தமிழ்ச்சங்கம் நடத்தும் முதல் இப்தார் விருந்தில் கலந்து கொள்வது பெருமகிழ்ச்சி அளிப்பதாக விழாவில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

—ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.