கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்

கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்.

தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர் கவிஞர் சினேகன். இவர் பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துவிடம் 5 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றினார். தொடர்ந்து கே. பாலச்சந்தர் இயக்கிய ‘புத்தம் புது பூவே’ படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் முதல் பாடலை எழுதினார். இதனையடுத்து, இவர் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார். ‘பாண்டவர் பூமி’ படத்திற்காக சினேகன் எழுதிய தோழா தோழா பாடல் பலரையும் கவர்ந்து. இவர் சுமார் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு மேல் பாடல் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சினேகனின் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமாகியுள்ளார். இதுகுறித்து சினேகன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நட்புக்குறிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் / அனைத்து கட்சி அரசியல் தோழர்களுக்கும் வணக்கம் .
எனது தந்தையார் இன்று அதிகாலை 4.30 மணிக்கு காலமாகி விட்டார்
என்ற துயர தகவலை தெரிவித்து கொள்கிறேன். நாளை காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எனது சொந்த கிராமம் புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது”

இவ்வாறு கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.