Gold Rate | தங்கம் விலை ரூ.400 குறைவு.. இன்றைய விலை நிலவரம் இதோ!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த 17-ம் தேதி வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,200-க்கும், சவரன் ரூ. 97,600-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

அதன்படி, தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,450க்கும், சவரனுக்கு ரூ.400க்கும் ரூ.91,600க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.