முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, ஐதராபாத் அருகே வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு மு.க.ஸ்டாலினுக்கு, சந்திரசேகரராவ் அழைப்பு விடுத்தார்.
மேலும், 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல் தொடர்பான கூட்டணி, கோதாவாரி – காவிரி நதிநீர் இணைப்பு, இருமாநிலங்கள் இடையிலான தொழில்வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
https://twitter.com/CMOTamilnadu/status/1470751136483213316
இந்த சந்திப்பின்போது, தெலங்கானா மாநில தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், தமிழ்நாடு மாநில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் உடனிருந்தனர். ஏற்கனவே, சந்திரசேகரராவ் 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/CMOTamilnadu/status/1470754542845247491








