பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி ஆகியோர் இன்று தங்களது 60வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பாக அக்கட்சி செய்தி தொடர்பாளர் ப. சுவாமி நாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், இன்று(ஜூன்.24) பாமக நிறுவனர் ராமதாஸ் – துணைவியார் சரஸ்வதி ஆகியோரின் திருமணநாள் விழா தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றதாக கூறியுள்ளார்.
இன்று மாலை நடந்த இந்த திருமணநாள் விழாவில் ராமதாஸின் குடும்பத்தினர்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகள் உட்பட உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்களுக்கு ராமதாஸ் – சரஸ்வதி ஆகியோர் ஆசி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.








