“புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!

நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர்,…

நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில்,

“நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி.” என அதில் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடிகர் விவேக் உடலுக்கு இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.