முக்கியச் செய்திகள் சினிமா

ஆஸ்கர் விருதுடன் பிரதமர் மோடி; நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழு!

ஆஸ்கர் விருது  வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர், பிரதமர் மோடியை சந்தித்து, வாழ்த்து பெற்றுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் வளர்ப்பு முகாம் மிகவும் பிரசித்தி
பெற்ற யானைகள் முகாம் ஆகும். இந்த முகாமில் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற இரு
குட்டி யானைகள் உட்பட  28 வளர்ப்பு யானைகள் பாராமரிக்கப்பட்டு வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தாயை பிரிந்த இரு குட்டி யானைகளை பாராமரித்து வந்த பாகன் பொம்மன், பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகளுக்கும் இடையே உள்ள உறவு முறையை மையமாக கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு உதகையில் பயின்று வந்த கார்த்திகி கொன்சால்வஸ் என்ற பெண் பொம்மன், அவரது மனைவி பெள்ளி மற்றும் இரு குட்டி யானைகள் இடையேயான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் படம் தயாரித்து அப்படத்திற்கு தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் (Elephant Whisperers) என பெயரிட்டு யூடியூப் மற்றும்  மற்றும் நெட்ஃபிலிக்ஸ்  தளத்தின் மூலம் வெளியிட்டனர்.

இந்த படம் சிறந்த ஆவணகுறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது. கடந்த 13ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 9வது ஆஸ்கர் விருது விழாவில் படத்தின் இயக்குநர் கார்த்திகி மற்றம் அப்படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து  தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இருவரும், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ திரைப்படத்தின் புத்திசாலித்தனமும் வெற்றியும் உலக அளவில் அறியப்பட்டுள்ளது. அனைவரது கவனத்தையும், பாராட்டுகளையும், பெற்றுள்ளது. இந்த குழுவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவை அவர்கள் மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்”.

 

அப்போது, பிரதமர் இரு கைகளிலும் ஆஸ்கர் விருதை பிடித்து நிற்பது போல் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது

Jeba Arul Robinson

பெற்ற மகளை மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாகத் தாக்கிய தந்தை!

Gayathri Venkatesan

திமுக-காங்., கூட்டணியில் இழுபறி! கே.எஸ்.அழகிரி கண்ணீர் மல்க பேச்சு!!

Jeba Arul Robinson