முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

NCL 2023 : வல்லம் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் அணியை வீழ்த்தி கரூர் சேரன் உடற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வெற்றி

என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், வல்லம் பெரியார் மணியம்மை இன்ஸ்டிட்யூட் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கரூர் சேரன் உடற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வெற்றி பெற்றது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சி மண்டலத்தில், இன்று நடைபெற்ற போட்டியில், கரூர் சேரன் உடற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியுடன், வல்லம் பெரியார் மணியம்மை இன்ஸ்டியூட் மோதியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : NCL 2023 : சேரன்மகாதேவி ஸ்கேட் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி வெற்றி

இதில் டாஸ் வென்ற சேரன் உடற்கல்வி கல்லூரி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெரியார் மணியம்மை இன்ஸ்டியூட் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கரூர் சேரன் உடற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி அணி, சிறப்பாக விளையாடி, 13 ஓவரிலேயே, 5 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றனர். கரூர் சேரன் உடற்கல்வி கல்லூரி அணியை சேர்ந்த சந்திரு ஆட்டநாயகனாக தேர்வானார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரெம்டெசிவர் உயிர் காக்கும் மருந்தா?

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் அண்ணனும் தம்பியும் என்ன செய்கிறார்கள் ?

EZHILARASAN D

இந்திய அரசியலின் மையமாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு பாஜக இருக்கும்: பிரசாந்த் கிஷோர்

Mohan Dass