கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை!

கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு கட்டமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா பரவலின் தீவிரம் வடமாநிலங்களில் குறையத் தொடங்கிய நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது.…

கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்ட ஆட்சியர்களுடன் இரண்டு கட்டமாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவலின் தீவிரம் வடமாநிலங்களில் குறையத் தொடங்கிய நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா அதிகம் பாதித்த 100 மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

முதல் கட்ட ஆலோசனை வரும் 18ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் 9 மாநிலங்களை சேர்ந்த 46 ஆட்சியர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 20ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட ஆலோசனையில் 10 மாநிலங்களை சேர்ந்த 54 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த விருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட மாநிலங்களில் முதலமைச்சர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.