முக்கியச் செய்திகள் உலகம்

சர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்!

பாலஸ்தீன் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே தற்போது நடந்துவரும் ராணுவ தாக்குதலுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்படும் கிரெட்டா தன்பெர்க் வெளியிட்ட ட்விட் தற்போது சமூக வலைத்தளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ளது இஸ்லாமியர்களின் 3-வது புனித தளமான உலக புகழ்பெற்ற அல் அக்சா மசூதி. இந்த மசூதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் மசூதியும் சேதப்படுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா நோய் தொற்று காரணமாகக் கடந்த சில மாதங்களாகப் இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தாமல் இருந்தது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகையை பாலஸ்தீனர்கள் கொண்டாட இருந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினர் அல் அக்சா மசூதியில் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் மனிதத்தன்மை அற்ற செயல் என்கிற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளின் ஆதரவை தன்பக்கம் வைத்துக்கொண்டு இஸ்ரேல் தங்களுடைய தாக்குதலை நியப்படுத்திவருகிறது. உலகம் முழுவதும் இத்தாக்குதலைக் கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்படும் கிரெட்டா தன்பெர்க் வெளியிட்ட ட்விட் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரெட்டாவின் ட்விட்டை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மேற்கோள்காட்டிப் பகிர்ந்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் தனது கருத்தை முன்வைத்து வருபவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா. காலநிலை மாற்றம் குறித்த விஷயங்களிலும் இதர பிரச்சினைகளிலும் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களை விமர்சித்து தனது கருத்தைப் பதிவு செய்ததன் மூலம் பிரபலமாகப் பேசப்பட்டார். இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் தனது ஆதரவை கிரெட்டா தெரிவித்திருந்தார்.

தற்போது பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கிரெட்டா செய்துள்ள ட்விட்டில் ” நான் மிகத் தெளிவாக குறிப்பிடுவது என்னவெனில், நான் இஸ்ரேலுக்கோ பாலஸ்தீனத்துக்கோ “எதிராக” இல்லை. யாரிடமிருந்தாலும் எந்தப் பகுதியிலிருந்தாலும் எழும் வன்முறைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரானவள் நான் என்று சொல்ல தேவையில்லை. ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டை விமர்சித்து பலர் பின்னூட்டம் இட்டுள்ளனர். அடக்குமுறையை ஏவும் இஸ்ரேலையும் தாக்குதலுக்கு எதிர்வினை ஆற்றும் பாலஸ்தீன மக்களையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பேசுவது ஏற்புடையதல்ல என்று பலர் கூறியுள்ளனர். பாதிக்கபடும் மக்களின் பக்கம் நிற்காமல் இரண்டு பக்கமும் வன்முறைதான் என்பதுபோல பேசுவது மோசம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

யாசர் அராபத்தின் தலைமையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் இருந்தவரை பாலஸ்தீன மக்களின் உரிமைப் போராட்டம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வந்தது. உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. யாசர் அராபத் மறைவிக்கு பிறகு ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை வைத்து மக்களின் விடுதலை போராட்டத்தையே தீவிரவாத நடவடிக்கைபோல் இஸ்ரேல் மற்றும் அதற்கு ஆதரவான நாடுகள் கூறிவருகின்றன. இதுபோன்ற கருத்துகளை ஆதரிக்கும் விதமாக கிரெட்டாவின் ட்விட் உள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகத்தைப் பாதுகாக்கக் குரல் எழுப்பும் கிரெட்டா, அந்த உலகத்தில் பாதிக்கப்பட்டு அபாயகரமான தாக்குதலுக்கு ஆளாகும் மக்களின் பக்கம்தானே நிற்க வேண்டும்? என்று நீள்கிறது பின்னூட்டங்களின்‌ வரிசை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெங்களூருவிலிருந்து ஆடு திருட வந்த நபர்; கொத்தாக பிடித்த பொதுமக்கள்

EZHILARASAN D

தென்மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல்!

Jeba Arul Robinson

தாய்மார்கள் பாலூட்டும் அறை சீரமைக்கப்படுமா?

EZHILARASAN D