முக்கியச் செய்திகள் செய்திகள்

பிரதமர் உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பு!

தமிழக சட்டப் பேரவை தேர்தல் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி உட்பட 7 மத்திய அமைச்சர்கள் , 2 மாநில முதலமைச்சர்கள் என 30 பேர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளனர்,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி 20 தொகுதியில் போட்டியிடுகிறது. பா.ஜ.க வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நேற்று வெளியான நிலையில் அக்கட்சி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க 30 பேர் கொண்ட நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சாலை மற்றும் போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் , மத்திய வேளாண் இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , மத்திய பிரதேச மாநில முதலவர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’அரசியலுக்கு வாங்க ரஜினி’… சென்னையில் ரசிகர்கள் போராட்டம்!

Jayapriya

அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட “மீம்”!

Halley Karthik

தொடரும் கள்ளச்சாராய வேட்டை; சாராய லாரி டியூப்கள் பறிமுதல்

G SaravanaKumar