இளம் மனங்களில் கல்வியையும் மகிழ்ச்சியும் விதைக்கும் கடின உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவரும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருது இன்று டெல்லியில் வழங்கப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “இளைய மனங்களில் கல்வியையும் மகிழ்ச்சியையும் விதைக்கும் கடினமான உழைப்பாளிகளான ஆசிரியர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்கள்” எனவும் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா








