2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் இந்தியா 114 பதக்கங்களுடன் 4ம் இடத்தில் நிறைவு செய்தது.
இந்த நிலையில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “சாதனை அளவாக 114 பதக்கங்களை வென்றது, இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன் என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் ஒவ்வொரு உறுப்பினரின் அசாதாரணமான உறுதிப்பாட்டிற்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சாதனைக்கு பங்களித்துள்ளனர் என்றும், தங்களது சாதனைகளால் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சமீபத்தில் நிறைவடைந்த 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது பாரா விளையாட்டு வீரர்கள் நிகழ்த்தியது மகத்தான சாதனை!
சாதனை அளவாக 114 பதக்கங்களை வென்றது, இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறனாகும். இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும் ஒரு தருணம்!
நமது இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரின் அபாரமான உறுதிப்பாட்டிற்கும் எனது வாழ்த்துகள்.
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்குப் பங்களித்துள்ளதோடு, தங்களது சாதனைகளால் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.




