பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்…

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது.

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் காணோலி வாயிலாக நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்க இருக்கும், இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணைய அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.

அந்த கூட்டத்தில், நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள், தடுப்பூசி பணிகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசினை நடத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், ஊரடங்கு காலத்தில் போக்குவரத்துறை, விமான போக்குவரத்து துறை, மத்திய தொழில்நுட்ப துறை மற்றும் விமான போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய அமைச்சரவையில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும் அது குறித்து ஆலோசனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் மூத்த தலைவர்கள் பலருக்கு பதவிகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகிவுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.