முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ்-ன் 14வது ஆண்டு கூட்டம் சீனா தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் அமைப்பில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காரணமாக, அமைப்பின் செல்வாக்கு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு காரணமாக, நமது நாடுகளின் மக்கள் பலனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரிக்ஸ் இளைஞர் மாநாடு, பிரிக்ஸ் விளையாட்டு, பல்வேறு அமைப்புகளுக்கு இடையே நடைபெற்ற சந்திப்புகள் ஆகியவற்றின் மூலம் நமது மக்களுக்கு இடையேயான தொடர்பை பலப்படுத்தியுள்ளோம் என பிரதமர் தெரிவித்தார்.

உலக பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் பிரிக்ஸ் நாடுகள் இதே அணுகுமுறையைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதன் மூலம், கொரோனா தொற்றுக்குப் பிறகான உலகப் பொருளாதாரத்திற்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்க முடியும் என கூறினார்.

புதிய வளர்ச்சி வங்கிகளை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம் நமது மக்கள் மேலும் பலனடைவார்கள் என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் உத்தரவு!

Hamsa

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெறாது” – எச். ராஜா

Gayathri Venkatesan

’உத்தமக் கலைஞனே, காற்றாய் மீண்டு வா’ ரஜினி விரைவில் நலம்பெற வைரமுத்து ட்வீட்

Halley Karthik