குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு வாஷிங்டன் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். இந்திய நேரப்படி அதிகாலை 4 மணி அளவில் வாஷிங்டன் ((Andrews,)) ஆன்டிரிவ்ஸ் விமான நிலையத்தில், பிரதமர் மோடியின் தனிவிமானம் தரையிறங்கியது.
தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டு உயர்அதிகாரிகளும், இந்திய தூதரக அதிகாரி களும் வரவேற்பு அளித்தனர். அப்போது கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், அமெரிக்க வாழ் இந்தியர்கள் விமான நிலையத்தில் திரண்டு பாரத்மாதா கீஜே என்ற முழக்கங்களை எழுப்பி வரவேற்றனர். இதனை கண்ட பிரதமர் மோடி, அவர்கள் அருகே சென்ற உற்சாகமாக, கைக்குலுக்கி வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார்.
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். தொடர்ந்து, நாளை ((24ம் தேதி ))குவாட் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடன் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு குறித்து பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








