டெல்லி அணிக்கு 135 ரன்களை இலக்காக ஹைதராபாத் அணி நிர்ணயித்தது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இதுவரை 3 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், டெல்லி கேப்பிட்டல் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், விருத்திமான் சகா ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரை அன்ரிச் நோர்ஜே வீசினார். முதல் ஓவரிலேயே வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்னிலும், சகா 18 ரன்னிலும், மணிஷ் பாண்டே 17 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதன்பின் வந்த அப்துல் சமாத் 21 பந்தில் 28 ரன்களும், ரஷித் கான் 19 பந்தில் 21 ரன்களும் சேர்க்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் சார்பில் நோர்ஜே 2 விக்கெட்டும், ரபடா 3 விக்கெட்டும், அக்சார் பட்டேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.








