அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதியளித்த அமைச்சர்; ஆனால்…

அரசு வகுத்துள்ள கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. கிணற்றை…

அரசு வகுத்துள்ள கொரானா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை புறநகர் மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவக் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. கிணற்றை பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலை இருந்தது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் தற்போது கிணற்றை சுத்தம் செய்துள்ளது. அந்த இடத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

“மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. காலாவதியான மருந்துகள் அல்லது பேப்பர்கள் அகற்றப்பட வேண்டியதுதான். கிணற்றில் கொட்டியது தவறுதான். செய்தியின் உண்மைத்தன்மையை அறிய இணை இயக்குநர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உண்மையிலேயே காலாவதியான மருந்து கொட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் ஒரு சில இடங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவ கழிவுகளை அகற்றும் முறைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவக்கழிவுகள் அகற்றப்படுவதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். தொற்று ஏற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்துவதுதான் தீர்வு. அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் திட்டமில்லை என்று கூறினார். அதேபோல அரசு விதித்துள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்டம் நடத்தலாம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.