முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பிளஸ் 2 தேர்வு: கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பித்தார் அன்பில் மகேஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக் கேட்பு அறிக்கையை முதலமைச்சரிடம், அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று சமர்பித்தார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுவை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து 4 நாட்களாக ஆலோசனை நடைபெற்றது.
முதற்கட்டமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடம் இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் கருத்துகள் பெறப்பட்டன. இதில், 60 சதவீதம் பேர் பொதுத்தேர்வு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில், பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.

இதில், திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பாமக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை, முதலமைச்சரை மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். இந்த அறிக்கையை ஆய்வு செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி முடிவை அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

இணையத்தை கலக்கும் விலங்குகளின் ட்வீட்!

Vandhana

வாக்குப்பதிவு முன்னிட்டு கொடைக்கானில் அரசு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன!

Karthick

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு இதுவரை எந்த தொற்றும் ஏற்படவில்லை- ராதாகிருஷ்ணன்!

Jayapriya