முக்கியச் செய்திகள்

’தப்புல பெருசு சிறுசு இல்லை, தப்பு அவ்வளவுதான்’: கார்த்திக் சுப்புராஜின் மேஜிக், பீட்சாமுதல் ஜகமே தந்திரம் வரை!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வரும் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளிவரவிருக்கும் ’ஜகமே
தந்திரம்’ டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. டிரைலரை பார்ப்பதற்கு முன்னால்
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு கதாநாயகன்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர்கள்
நினைத்த காலக்கட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ், அட்டகாசமான வில்லன் கதாபாத்திரத்தை
’ஜிகிர்தண்டா’வில் வடிவமைத்திருந்தார்.

அதிகமாக கொண்டாடப்பட்ட பீட்சா படத்தைப்பற்றி பேசுவதைவிட ’இறைவி’யில் கார்த்திக் சுப்புராஜ் முதிர்ச்சியான கதை களத்தை கையாண்டார். பெண் தெய்வங்களும், பெண்களும் எப்படி ஆண்களால் வதைக்கப்படுகிறார்கள் என்றே கதை நகரும்.

ஒரு தோற்றுப் போன இயக்குநரின் வலியை, குடிபோதைக்கு அடிமையான இயக்குநரை சகித்து
வாழும் மனைவி கதாபாத்திரம். பல கணவுகளுடன் விஜய் சேதுபதுபதியை திருமணம் செய்யும்
அஞ்சலி கதாபாத்திரம். மீண்டும் திரும்பும் கோவலனை, கண்ணகி ஏன் ஏற்றுகொள்ள வேண்டும்
என்ற கேள்வியை எழுப்பும். வாழ்நாள் முழுவதும் தனது கணவருக்கு சமைத்து கொண்டே
இருக்கும் தாயான வடிவுகரசியிடம் பாபி சிம்ஹா பேசும் வசனங்கள் எதார்த்த உண்மைகளை
அப்பட்டமாக வெளிப்படுத்தியது. இறுதியாக எஸ்.ஜே சூர்யா பேசும் வசனத்தில் கண்ணீர்
வடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. இது ஆண் உலகத்தின் குற்றங்களை உணர்த்தும் படமாக
அமைந்தது. ரஜினியின்’ பேட்ட’படத்தில் நவாஸுதீன் சித்திக்கை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார்,
கார்த்திக் சுப்புராஜ்.

இப்போது ’ஜகமே தந்திரம்’ படத்திற்கு செல்வோம். கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன்,
தனுஷ். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இங்கு
ஊருக்காக வாழ வேண்டும் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டமைப்பு
அனைவருக்கும் ஒருவித மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும்
பாடலை, யாரால் கொண்டாடாமல் இருக்க முடியும்?

சந்தோஷ் நாராயணன் குரலில் தொடங்கும், இந்த பாடலில் தனுஷும் பாடியிருக்கிறார்.

அந்த 4 பேர் எனக்கு தேவைபடும்போது அந்த பரதேசியை காணும் என்று சொல்லும்போது நமது
வாழ்வோடு தொடர்புபடுத்த முடிகிறது. மேலும் எது உன் தகுதியை தீர்மானிப்பாது இங்கே யாரும்
இல்லை என்ற உணர்வையும்.

இறுதியாக வேகமாக வரும் பறை பீட்டையும் ரசிக்காமல் கடக்க முடியாது.
அதுபோல் கடந்த இரண்டு நாட்கள் முன்பு வெளியான டிரைலரில் சந்தோஷ் நாராயணன் அசத்தியிருக்கிறார்.
தனுஷ், கலையரசன் சிரிப்பை பாடலில் சேர்த்ததாக இருக்கட்டும், படத்தின் ஒட்டுமொத்த
சாராம்சத்தையும் வெளிகாட்டியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு படத்தின் முதல் டிரைலர் வெளியானது. சுருளி யார் என்று ஒரு
வெள்ளைகாரர் கேட்பார். இந்த டிரைலர் மூலம் சுருளி ஒரு பரோட்டா மாஸ்டர்.

பின்பு தாதாவாக மாறுகிறார். இரண்டாவது டிரைலரில் வெளிநாட்டில் தாதாவாக இருக்கும் ஒரு கதாபாத்திரம்
‘நான் சொல்வதை செய்வதே உன் வேலை’என்று டிரைலர் தொடங்குகிறது.

அடுத்த காட்சியில் தனுஷ் வெடிகுண்டுடன் ஓடுகிறார். இதற்கு நடுவில் ’ட…ட…ட கெட் ரெடி’
என்று மியூசிக். நீங்கள் செய்வது பெரிய தப்பாக தெரிகிறது என்று சொல்லும் துணை நடிகருக்கு
துனுஷ் கூறும் பதில், இனி குடியேறியவர்கள் வேண்டாம் என்று வெள்ளைக்கார தாதா
கதாபாத்திரம் கூறும் வசனமாக இருக்கட்டும், படத்தின் கதையை ஒர் அளவுக்கு அனுமானிக்க
முடிகிறது. எதற்கு அனுமானங்கள் டிரைலர் கூறுவதுபோல் ’ட…ட…ட கெட் ரெடி’ படத்தை
பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:

Related posts

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன?

சிங்கப்பூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்களை டெலிவரி செய்யும் ரோபோ!

Niruban Chakkaaravarthi

அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!