ராணிபேட்டை அருகே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஈராளம்சேரி பகுதியில் பிளாஸ்டிக கழிவுகளை மறுசுழற்சி செய்து அதிலிருந்து பர்னஸ் ஆயில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. ஆலையின் வளாகத்தில் மறுசுழற்சி செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 50 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் இரண்டு ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டிருந்தன. ஆலை கடந்த ஒரு மாத காலமாக இயங்கவில்லை.இதனால் ஆலை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆலையின் வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலையின் வளாகத்தில் இருந்தது பிளஸ்டிக் கழிவுகள் என்பதால் கரும்புகையுடன் நச்சுவாயும் வெளியேற துவங்கியது.இதனால் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அதிக வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் தீப்பற்றியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
—-வேந்தன்