”தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே திட்டங்கள் மக்களிடம் சேர்ந்திருக்க வேண்டும்” என ஐஏஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், துறை செயலாளர்கள் என இரண்டு நாள் இறுதி மாநாட்டின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறையினர், வனத்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு வருடமும் இரண்டு நாள் மாநாடு நடத்துவது வழக்கம் அந்த வகையில், 2023 – க்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்று வருகிறது
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் நேற்று காலை 9.00 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் காவல் துறையினரிடம் முதல் அமர்வு நடைபெற்றது. நண்பகல் 12.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது மாலை 5.30 மணி அளவில் காவல் துறை உயர் அதிகாரிகளிடம் மூன்றாம் அமர்வு நடைபெற்றது
இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர்கள், துறை செயலாளர்கள் என இரண்டு நாள் இறுதி மாநாட்டின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
இதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது..
தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த இந்த மாநாடு நடைபெற்றது. இந்த திட்டங்களை ஒரு முதலமைச்சரின் திட்டமாக ஒரு கட்சியின் திட்டமாக எடுத்துக் கொள்ளாமல் அலுவலர்கள் அனைவரும் தனது கனவு திட்டமாக மக்களின் திட்டமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
மகளிர் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம். மகளிர் உரிமை திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில் ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் மீண்டும் மகளிர் உரிமைத்தொகை பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
மாணவர்களின் காலை உணவு திட்டம் மிகவும் வரவேற்பு பெற்றுள்ளது. கல்வி,சமூகம்,பொருளாதாரம் எல்லா தலங்களிலும் நமது மாநிலம் சரியான பாதையில் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியாளர்கள் பொதுமக்களின் தேவைகளை நேரில் சென்று பூர்த்தி செய்ய வேண்டும்
மக்களுக்கு நலம் தரும் திட்டங்களை எந்த தோய்வு இல்லாமல் சென்றடைய வேண்டும். அதுதான் என்னுடைய அன்பு கட்டளை. அதனை நீங்கள் மனதில் கல்வெட்டாக பதிவு செய்து செயல்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன்முறைகளையும் அரசு சகித்துக் கொள்ளாது.
அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவு உதவித்தொகை ரூபாய் 1000லிருந்து ரூபாய் 1400ஆக வழங்கப்படும் எனவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு உதவித்தொகை ரூபாய் 1100இல் இருந்து ரூபாய் 1500ஆக உயர்த்தி வழங்கப்படும்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே அனைத்து திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.