இந்திய தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் 15 பொது பொறியியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், இந்திய தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட சமர்த் உத்யோக் பாரத் திட்டத்தின் கீழ் எத்தனை பொது பொறியியல் தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், அதனை விரிவாக்கும் திட்டம் உள்ளதா என்றும் கேட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜர் பதில் அளித்துள்ளார். அதில், சமர்த் உத்யோக் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 15 பொது பொறியியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஐஐடி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சையன்ஸ், ராஞ்சியில் உள்ள கனரக பொறியியல் நிறுவனம் உள்ளிட்டவற்றில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சோதனை, பயிற்சி, சான்றிதழ், தொழிற் கருவிகள் என பல விதங்களில் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது பொறியியல் மையத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட வெல்டிங் தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக ரூ.87.06 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கிரிஷன் பால் குர்ஜர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எத்தனை புத்தாக்க நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்ற பி. வில்சன் எம்பியின் மற்றொரு கேள்விக்கு, இதுவரை அவ்வாறு எந்த ஒரு நிறுவனமும் அடையாளம் காணப்படவில்லை என அரசு பதில் அளித்துள்ளது.
பொது பொறியில் மையங்களை விரிவுபடுத்த எத்தனை நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது என்ற பி.வில்சன் எம்பியின் மற்றொரு கேள்விக்கு, 4 நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்த எனது கேள்விக்கு, தற்போது திட்டத்தின் கீழ் ஐந்து பொதுவான பொறியியல் வசதி மைய திட்டங்கள் மட்டுமே உள்ளன; திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இன்குபேட்டர்களின் விவரங்கள்; அதற்கு மாண்புமிகு அமைச்சர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்