கள்ளக்குறிச்சியில் வன்முறை நடைபெற்ற பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்
பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமைதியான போராட்டம் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த மாதம் 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், பள்ளி வாகனங்கள், மாணவ மாணவியரின் சான்றிதழ்கள், என அனைத்தும் தீயில் கருகி போனது. இதனால் பள்ளியில்
படித்து வந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளின் நிலை கேள்விக்குறியானது.
மாணவி இறந்த 13 ஆம் தேதி முதல் 26 தேதி வரை பள்ளி வகுப்புகள் நடத்த முடியாத
சூழ்நிலை ஏற்பட்டது. 3000க்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பை கருத்தில்
கொண்டு அமைச்சர் அன்பில் மகேஷ், 27 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளும், ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று நேரடி வகுப்புகளும் நடைபெறும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஏ.வாசுதேவனூர் அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி கல்வியியல் கல்லூரியில் தற்காலிகமாக 9,
10, 11, 12, ஆகிய வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் நடைபெற்றது. இன்று
காலை 9 மணி அளவில் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் 8
மணியிலிருந்தே மாணவ மாணவிகள் வரத் தொடங்கினர். அருகே உள்ள கிராமங்களில்
இருந்து வரும் மாணவர்களின் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பள்ளிப்
பேருந்தில் அழைத்து வரப்பட்டது.
பின்பு இன்று காலை 10 மணி அளவில் 9, 10, 11, 12 ஆகிய மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. இதில் அசம்பாவிதம் எதுவும்
நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நேரடி வகுப்பில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்பில் கலந்து கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்