பஹாமஸில் விமான விபத்து – 10 பேர் பலி…!

பஹாமஸில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

கரீபியன் கடற்பரப்பில் அமைந்துள்ள பஹாமஸ் நாட்டில் செஸ்னா 402 ரக விமானம் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. நாட்டின் தலைநகரான நஸ்ஸாவிற்கு மேற்கே உள்ள கடற்பகுதியில் அமைந்துள்ள ஆண்ட்ரோஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தலைநகர் நஸ்ஸாவிலிருந்து புறப்பட்டு, சான் ஆண்ட்ரோஸை நோக்கிச் சென்ற ஃபிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் அந்த விமானத்தில் டா பாண்ட் பேண்ட் என்ற இசைக் குழுவின் உறுப்பினர்கள் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், ஃபிளமிங்கோ ஏர் நிறுவனத்தின் விமான இயக்கச் சான்றிதழை அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.