முக்கியச் செய்திகள் தமிழகம்

’இன்னுயிர் காப்போம் திட்டத்தை’ மற்ற மாநிலங்கள் செயல்படுத்த திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள வெள்ளி விழா அரங்கில் உலக
விபத்து தினம் மற்றும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தனியார் மருத்துவமனையை விட மேலான மருத்துவமனை என்ற வகையில் ஸ்டான்லி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிக அளவில் செய்யும் மாநிலம், இந்தியாவிலேயே தமிழ்நாடு தான்.

முதலமைச்சரின் காப்பீடு திட்டம் மிகப்பெரிய அளவில் பயன்பட்டு கொண்டிருக்கிறது. 5 லட்சம் முதல் 25 லட்சம் வரை காப்பீடு திட்டம் உள்ளது. காப்பீடு திட்டத்தை கவனிக்க என் அலுவலகத்தில் தனி அலுவலரை பணியமர்த்தி உள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள 36 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் உடல் உறுப்பு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் ஓராண்டுக்கு 50 லட்சம் வரை விபத்தினால் மரணம் அடைகிறார்கள். இந்தியாவில் 2021 ல் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகள் மூலம் உயிரிழந்துள்ளனர். 228 அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 673 மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டது. இந்த மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்பட்டு வருகிறது.

விபத்து என்றால் உடனடியாக யாரும் முன்வந்து உதவி செய்ய மாட்டார்கள். பார்த்து பரிதாபப்பட்டு விட்டு சென்று விடுவார்கள். அவ்வாறு செல்ல கூடாது. 1 லட்சத்து 20 ஆயிரத்து 918 பேர் இந்த இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை பயனடைந்து உள்ளனர். சுமார் 107 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை பார்த்து மத்திய அரசு இதன்
மாதிரி வடிவத்தை கேட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

15 மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை பயன்படுத்துபவர்கள்
எண்ணிக்கை எவ்வளவு, எங்கள் ஆட்சி அமைந்த பிறகு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை சட்டமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறோம். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 15 மாதங்களுக்கு முன் நாள் ஒன்றுக்கு சிகிச்சை பெற்ற புற நோயாளிகள் எண்ணிக்கை 7000 ஆக இருந்தது ,தற்போது அது 17000 ஆக உள்ளது . ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 ஆக இருந்த புற நோயாளிகள் பயனாளர்கள் 1700 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சாலை விபத்து 13% சதவிகிதம் குறைந்துள்ளது. 30% நோயாளிகள் 48 மணி நேர சிகிச்சைக்கு பிறகு இறக்கின்றனர். இதைக் குறைக்க ஆலோசனை செய்ய வேண்டும். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் கூடுதலாக நிறைய மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளது. 108 அவசர ஊர்திகள் உயிர் சிகிச்சை தரும் தரமான மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வருவது முக்கியம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐதராபாத்தை வீழ்த்தி தனது 2வது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு அணி

G SaravanaKumar

பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது- அமைச்சர்

G SaravanaKumar

8ம் தேதி பள்ளி திறப்பு; அனுமதி கடிதம் கட்டாயம்

Jayapriya