முக்கியச் செய்திகள் இந்தியா

பிபின் ராவத் மறைவு; மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ள சொந்த ஊர் மக்கள்

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மறைவையொட்டி, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிபின் ரவாத் பிறந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பாமோரிகல் கிராம மக்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.

இது குறித்து பிபின் ராவத் உறவினர் கூறுகையில், தங்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என தெரிவித்தார். விரைவில் இங்கு வந்த தங்களை சந்திப்பதாக கூறிய நிலையில், அவரின் மறைவு செய்தி தங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், வீரர்களின் உடல்கள் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் முப்படைகளின் தளபகளான, ஹரி குமார் (கடற்படை), நரவானே (ராணுவம்), வி.ஆர்.சவுத்ரி (விமானப்படை) ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் என மற்ற உயர் அதிகாரிகளும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர், “இந்த நாட்டிற்காக ஒவ்வொரு நொடியையும் முப்படைத் தலைமை தளபதி அர்ப்பணித்துள்ளார். அவரது இழப்பு பேரிழப்பாகும்.” என்று கூறினார். மேலும், “சிகிச்சை பெற்று வரும் வருண் சிங்கை சந்தித்தேன். அவர் குணமடைய பிரார்த்திருக்கிறேன்.” என்றும் கூறினார்.

வெல்லிங்டன் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண்சிங் பெங்களூருக்கு உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

”நல்ல அரசை கொடுப்பதற்கான அதிகாரம் வேண்டும் என்பதே குறிக்கோள்”- கமல்ஹாசன்!

Jayapriya

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் தகவல்

Halley Karthik

மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் நாளை டெல்லி செல்லவிருப்பதாக தகவல்

Jeba Arul Robinson