ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார்.

நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் என மொத்தம் 13 அதிகாரிகள் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும் என விமானப்படை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் சுற்றுலா பயணிகள் சிலர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவில், மேகக்கூட்டங்களுக்கு இடையே பறந்துக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதியிலிருந்து கறுப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து நடந்த பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து தற்போது வெலிங்டன் குன்ன்னூர் மைதானத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய அதிகாரிகள் அஞ்சலி செலுத்திய பின்னர் உடல்கள் சாலை மார்கமாக குன்னூரிலிருந்து கோவை சூலுருக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளிக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.