முக்கியச் செய்திகள் தமிழகம்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன்பு மேகமூட்டத்திற்குள் சிக்கிய கடைசி நொடி வீடியோ

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன்பு மேகமூட்டத்திற்குள் சிக்கிய கடைசி நொடி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக, பிபின் ராவத் உட்பட ராணுவ வீரர்கள் சென்ற எம்ஐ ரக ஹெலிகாப்டர், மேகமூட்டத்திற்குள் சிக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குள்ளாகும் முன் மேக மூட்டத்திற்கு நடுவே பறந்த ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நொடி காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் மேட்டுப்பாளையம் அருகே சென்ற போது பனிமூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. இந்த ஹெலிகாப்டர் எம்.ஐ.17வி5 வகை என்பதால் பனிமூட்டத் திலும் செல்லக்கூடிய வசதி இருப்பதால் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தை கடந்து சென்றபோது ஹெலிகாப்டர் தள்ளாடியபடி சென்று உள்ளது. மேலும், பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஹெலிகாப்டரால் உயரத்தில் பறக்கவில்லை. தாழ்வாக பறந்து சென்றதாக கூறப்படுகிறது.

குன்னூர் காட்டேரி பூங்கா அருகே உள்ள இப்சேட் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் சென்றபோது, அங்கும் பனிமூட்டம் பரவி இருந்ததால், திடீரென்று அங்கு இருந்த 40 அடி உயரம் கொண்ட மரத்தில் ஹெலிகாப்டரின் இறக்கை மோதி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அதன் வால்பகுதியும் மற்றொரு மரத்தில் மோதி இருக்கலாம் இதனால், மரத்தில் மோதிய ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஐசிஎம்ஆர்

Saravana Kumar

இறந்த யானையை பிரிய மனமில்லாமல் கதறி அழுத வனக்காவலர்: வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

Saravana

தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு வாய்ப்பு மறுப்பு; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

Halley Karthik