முக்கியச் செய்திகள் தமிழகம்

பிபின் ராவத் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்

முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது.

பிரதமர் மோடி:
“முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பாதுகாப்பு சீர்திருத்தங்கள் உட்பட பல்வேறு அம்சங்களில் சிறப்பாக பணியாற்றியவர் பிபின் ராவத். அவரது சேவையை இந்தியா என்றும் மறக்காது.”

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்:
“முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் அகால மரணம் நமது ராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.”

குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு:
“குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பிற வீரர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”


காங்கிரஸ் முன்னாள் ராகுல் காந்தி:
“முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம், இந்த நேரத்தில் பிபின் ராவத் குடும்பத்துடன் உடன் நிற்கிறோம்.”

உள் துறை அமைச்சர் அமித் ஷா:
“முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்; இந்த துயரமான இழப்பை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும்.”

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்:
“பிபின் ராவத் உள்ளிட்டோரின் அகால மரணம் குறித்து நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்; தேசம் தனது துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது.
தாய்நாட்டிற்கான அவரது 40 ஆண்டுகால தன்னலமற்ற சேவை, வீரம் ஆகியவை எப்போது நினைவுகூரப்படும்.”

மத்திய அமைச்சர் எல் முருகன்:

“நாட்டின் முப்படைகளின் முதல் தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்கள் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்தது மனவேதனை அளிக்கிறது; நம் தேசத்தின் நலனுக்காக வாழ்ந்த அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.”

Advertisement:
SHARE

Related posts

15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

Vandhana

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடைபெறுகிறது

Saravana Kumar

கடைசி ஒரு நாள் போட்டி: 225 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி

Gayathri Venkatesan