முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத் குறித்து விரிவான தகவல் பின்வருமாறு:
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத், ‘AWWA’ எனப்படும் ராணுவ அதிகாரிகளின் மனைவிகளுக்காக உருவாக்கப்பட்ட நல சங்கத்தின் தலைவராக இருந்தார். ‘AWWA’ சங்கம் இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றாகும்.
ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் நலனுக்காக உதவியவர் மதுலிகா. வீர நாரிஸ் ((Veer Naris))என்னும் ராணுவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவும் பல நலத்திட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் பங்கெடுத்தவர்களில் மதுலிகா ராவத்தும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு பொருளாதார ரீதியாக சுதந்திரமாக செயல்பட முனைப்பு காட்டினார்.
டெல்லியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் உளவியலில் பட்டப்படிப்பை முடித்தார். ‘AWWA’ தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என பல வகையான சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.








