முக்கியச் செய்திகள் தமிழகம்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17V5 ரக ஹெலிகாப்டர் சென்றபோது குன்னூர் அருகே காட்டேரி பார்க், நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி உள்பட 16 பேர் பயணித்தனர். பனிமூட்டம் காரணமாக கட்டுபாட்டை இழந்த விமானம் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உயிரிந்தவர்களை உடல்களை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவரது மரணத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisement:
SHARE

Related posts

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவுக்கு மீண்டும் வாய்ப்பு?

Ezhilarasan

பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசன் முட்டாள்: ஹெச்.ராஜா

Jeba Arul Robinson

போதைப் பொருள் வழக்கு: ஷாருக்கான், நடிகை அனன்யா வீட்டில் அதிகாரிகள் சோதனை

Halley Karthik