ராமநாதபுரம் அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருவர், தனது மூன்று சக்கர வாகனத்தை பிரத்தியேகமாக வடிவமைத்துள்ளார்.
முதுகுளத்தூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி நாக குமாரன். இவர் தனது மூன்று சக்கர வாகனத்தை, ஆட்டோவை போல பிரத்யேகமாக வடிவமைத்து, அதில் ஒலிபெருக்கி மூலம் திருவிழாக்கள், புதிய கடைகள் திறப்பு உள்ளிட்டவற்றை ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று அறிவித்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது 3 சக்கர வாகனத்தில் ஆம்ப்ளிபயர், சிறிய வகை ஒலிபெருக்கி, பேட்டரி உள்ளிட்டவற்றை வைத்து பொதுமக்களுக்கு கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தெருக்களில் தனது மூன்று சக்கர வாகனத்தின் மூலம் நாக குமாரன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பார்ப்பவர்களை பெரும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.







