போபாலில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது 3 சக்கர வாகனத்தை ஆம்புலன்ஸாக மாற்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சேவை செய்து வருகிறார்.
போபால் நகரத்தை சேர்ந்தவர் ஜாவீத் கான். அவர் அங்கு ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனால், அவர் தனது ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர், PPE கிட், சானிடைஸ்ர் மற்றும் ஆக்ஸிமீட்டர் ஆகியவற்றை பொறுத்தி ஒரு மினி ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சேவை அளித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், “ நான் கடந்த 18 வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்பட்டு வருவதை சமூக வலைத்தளங்களின் கண்டேன். மேலும் மருத்துவமனையில் போதிய ஆம்புலன்ஸ் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால், எனது மனைவியின் நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றி அவர்களுக்கு இலவசமாக சேவை அளித்து வருகிறேன்” என்று கூறினார். மேலும், அவர் கடந்த 15 – 20 நாட்களில் பல பேருக்கு உதவியதாகவும் தெரிவித்தார்.