புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம்! அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான வரவேற்பு!!

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்ததை முன்னிட்டுஅவரை வரவேற்று துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இந்திய தேசிய கொடி, பிரதமர் மோடியின் உருவப்படம் திரையிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.  பிரான்ஸ்…

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்ததை முன்னிட்டுஅவரை வரவேற்று துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இந்திய தேசிய கொடி, பிரதமர் மோடியின் உருவப்படம் திரையிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடி, பட்டத்து இளவரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாரீசில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அதிபர் இமானுவெல் மேக்ரனை சந்தித்த அவர், இரு தரப்பு நட்புறவு, ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர், தனது பிரான்ஸ் பயணத்தை முடித்துகொண்டு, பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். அவருக்கு அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது சிறப்பான வரவேற்பு அளித்தார். இருவரும், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்று துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில் இந்திய தேசிய கொடி, பிரதமர் மோடியின் உருவப்படம் திரையிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.