தக்காளி அருகே பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளியின் விலை உயர்வால் சில உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளில் இனி தக்காளியை பயன்படுத்தமாட்டோம் என அறிவிக்கும் அளவிற்கு விலை உச்சத்தை தொட்டிருக்கிறது.
குறிப்பாக தேசிய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ₹108 ஆக இருப்பதாக நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தக்களியின் விலை டெல்லியில் ரூ.150, லக்னோவில் ரூ.143, சென்னையில் ரூ.123 என அனைத்து பகுதிகளிலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதனால் தக்காளி விற்பனை செய்யும் இடங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கூட உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தினார். தக்காளி விற்பனையின் போது, அங்கே வாங்க வரும் மக்கள் அதிகமாக பேரம் பேசுவதோடு சிலர் ஆவேசமாக எல்லை மீறியும் நடத்துக் கொள்கிறார்களாம். சிலர் தக்காளியை திருடி செல்வதாலும் இரண்டு பவுன்சர்களை நிறுத்து முடிவிற்கு வியாபாரி வந்துள்ளார்.
https://www.instagram.com/reel/CujjSb8oeU5/?utm_source=ig_web_copy_link
இந்நிலையில், தக்காளி அருகே பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தக்காளி மிகவும் விலையுயர்ந்த பொருள் என்பதால், பாம்பு அதனை பாதுகாக்கிறது என்ற வாசகத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.








