சட்டப்பேரவையில் இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் இந்த நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து 14-ம் தேதி, முதல்முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, 16 ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை 2 பட்ஜெட்கள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற் றினர்.
அதனைத் தொடர்ந்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







