சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்..!

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்…

சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்துள்ளது.

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாலை வேளையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.

இதேபோல  சென்னை புறநகரில் மாலை 6 மணி முதல் ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த திடீர் மழையால்  நனைவதைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் பலர் மேம்பாலங்களின் அடியிலும் , நிழற்குடைகளிலும் ஒதுங்கினர். இந்த நிலையில் சைதாப்பேட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என பலர் மழைக்காக ஒதுங்கி இருந்தனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக, பெட்ரோல் பங்க்கின் மேற்கூரை சரிந்து விழுந்து, விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த விபத்தில் 30 மேற்பட்டோர் சிக்கினர் காயமடைந்தனர்.இந்த விபத்தில் சிக்கி கொண்ட கொண்ட நபர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தி. நகர், சைதாப்பேட்டை, அசோக் நகர் ஆகிய  மூன்று பகுதிகளில் இருந்து  தீயனைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு வருகை தந்தது.

மேற்கூரையை முழுவதுமாக அப்புறப்படுத்தும் பணியில் இரண்டு ஜேசிபி இயந்திரத்தை வைத்து தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை தொடங்கினர்.  இந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்தவர்கள்  ராயப்பேட்டை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தீயணைப்பு துறை மற்றும் சைதாப்பேட்டை காவல் துறை விசாரணையை மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் நேரில் ஆய்வு செய்தார். இடிபாடுகளில் சிக்கிய 6பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.