அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் – குஷ்பு பிறந்தநாளில் வெளியிட்ட படக்குழு..!

நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆம் ஆண்டு வெளியான அரண்மனை.…

நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2014ம் ஆம் ஆண்டு வெளியான அரண்மனை. இந்த படம் பிரமாண்ட வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அரண்மனை 2 கடந்த 2018 வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்றது.

அரண்மனை பாகம் ஒன்று மற்றும் பாகம் 2  திரைப்படங்களை தொடர்ந்து உருவாகிய படம் அரண்மனை 3.  இத்திரைப்படத்தில் சுந்தர் சி, ஆர்யா, ராசி கன்னா, ஆண்ட்ரியா, விவேக், யோகிபாபு என தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர்.

அரண்மனை 3 படத்தினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் சி தனது ‘அவ்னி சினிமேக்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார். இப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு கடந்த 2021 அக்டோபர் 14ல் திரையரங்குகளில் வெளியாகியானது

நகைச்சுவை கலந்த ஒரு திகில் படமாக உருவாகிய இப்படத்திற்கு சுந்தர் சி – குஷ்பூ இணைத்து அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க  உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட்  ஜெயன்ட் மூவிஸ்’  மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.  இந்த நிலையில் நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதனிடையே அரண்மனை படத்தின் நான்காவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர் சுந்தர்.சி இறங்கியிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது.  நடிகை குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை – 4 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அரண்மனை 4 படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவ்னி சினிமேக்ஸ் பி லிமிடட் சார்பில் குஷ்பு வழங்கும் இந்த படம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.