தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் விற்கபடும் பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரியை குறைப்பதற்கான அமைச்சரவையின் முடிவிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, பெட்ரோல் விலை ரூ.2.43 குறைந்து புதுச்சேரியில் ரூ.99.52 ஆகவும் காரைக்காலில் ரூ.99.30 ஆகவும் விற்பனை செய்யப்படும் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள சிபிஎஸ்இ / ஐசிஎஸ்இ உள்ளிட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகளைத் தொடங்கும் வகையில் அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள நாளை(26ம் தேதி)முதல் பள்ளிகளைத் திறக்க துணைநிலை ஆளுநர் tதமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தாமாக முன்வந்து பள்ளிகளுக்கு வர விரும்புவதால், 2021-22 கல்வியாண்டில் மாற்று நாட்களில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை (அரை நாள்) வாரத்தில் 6 நாட்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.