தமிழ்நாட்டில் கடந்த 14 நாட்களில் 12 வது முறையாக இன்றும் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்த பெட்ரோல், டீசல் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் அதிகரித்தது வருகிறது. கடந்த மார்ச் 22- ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ.101.16 காசுகளுக்கும், டீசல் ரூ.92.19 காசுகளுக்கும் விற்கப்பட்டது. அதன்பிறது ஓரிரு நாட்களை தவிர தற்போது வரை விலை நாள்தோறும் உயர்ந்த வண்ணம் உள்ளன.
அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகள் உயர்நது ரூ.109.34க்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 38 காசுகள் உயர்ந்து ரூ.99.42க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 14 நாட்களில் பெட்ரோல் ரூ.7.94, டீசல் ரூ.7.99 அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த தொடர் விலை உயர்வால் அத்தியாவாசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Advertisement: